போராட்டம் என்ற பெயரில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சீர்குலைவுகளை ஏற்படுத்த முயன்ற 20 பேர் இருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தொழிற்சங்க நடவடிக்கை என்ற பெயரில் இவ்வாறு பெற்றோலிய கூட்டுத்தாபன நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் எந்தவொரு கட்சியினராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பொதுமக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
எரிபொருள் களஞ்சியம், விநியோகம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதாக அபிவிருத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கை எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.