இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
அத்தோடு, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 405 ரூபாவிலிருந்து 325 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதோடு, ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபா வரையிலும் குறைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.