Our Feeds


Sunday, March 12, 2023

SHAHNI RAMEES

பின்லாந்து பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயம்...!

 

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. 



உக்ரைனின் உட்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. 



இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. 



சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். 



இந்நிலையில், போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனுக்கு பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் விஜயம் செய்துள்ளார். 



அவரை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார்.



ஓராண்டு கால போரில் உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் வழங்கியதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பின்லாந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »