இலங்கை பொலிஸாருக்கான சீருடைகளை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் நன்கொடையாக கையளித்துள்ளது.
இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸிடம் வழங்கினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.