மகாவலி கங்கையின் குறுக்கே பல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்து தப்பிச் செல்லும்போது நீரில் மூழ்கி உயிரிழந்த கைதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பல்லேகல பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய கைதி கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (25) பல்லேகல எலிமஹன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சிறை கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.