இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும், குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் வார இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய விஜேவர்தன, அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கை தற்போது 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் உலகில் மூன்றாவது அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. ஆனால் இன்று அது தரவரிசையில் 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையை மிகக் குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார் என்றார்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது.
இந்தநிலையில், எரிபொருள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதால், வருட இறுதிக்குள் மக்கள் சில சலுகைகளை அனுபவிக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.