Our Feeds


Wednesday, March 15, 2023

ShortTalk

இஷாக் ரஹ்மான் MP யின் முயற்சியில் கம்பிரிகஸ்வெவ பாடசாலைக்கு குவைத் நிதியுதவியில் புதிய கட்டிடம்!



ஐ.எம். மிதுன்கான்


அனுராதபுரம், கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நான்கு வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நேற்று  (14) காலை 9 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் கலாப் எம். புதயிர் அவர்களின் வழிகாட்டலில்  அல்ஹிமா இஸ்லாமிக் சேர்விசஸ் அமைப்பின் பணிப்பாளர் அல்ஹாஜ் நூறுள்ளா நளீமி அவர்களின் முயற்சியில் குவைத் இஸ்லாமிக் கெயார் அமைப்பின் ஊடாகவே இவ்வேலைத் திட்டம் நடைபெற இருக்கின்றது. இதற்கான முழு நிதியினையும் குவைத் நாட்டின் நதா அப்துல் அசீஸ் பின்த் தலாமா என்பவர் வழங்குகிறார். 


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானோடு அல் ஹிமா இஸ்லாமிக் சேர்விஸ் அமைப்பின்பணிப்பாளர் நூறுல்லாஹ் நளீமி அவர்களும் அடிக்கல்லை நட்டி வைத்தார். பாடசாலை அதிபர் ஜெ.எ. அசாத் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள், அண்மைய பாடசாலை அதிபர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »