Our Feeds


Wednesday, April 12, 2023

ShortNews

சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க 11 பேர் அணி தீர்மானம்



(எம்.ஆர்.எம்.வசீம்)


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் 11பேர் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மே தின கூட்டத்தில் பலந்துகொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள் தெரிவானார்கள். அந்த உறுப்பினர்களில் 11பேர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து அமைச்சுப்பதவி மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகளை பொறுப்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஏற்பாடு செய்திருக்கின்ற மே தின கூட்டம் அல்லது பேரணியில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு தங்களது அணி தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »