Our Feeds


Friday, April 21, 2023

ShortNews

வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள் கொழும்பு வருகை!



சட்டவிரோத குடியேற்றத்துக்கான பயணத்தின்போது வியட்நாம் கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் இருந்த மேலும் 23 இலங்கையர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.


2022. நவம்பர் 07 ஆம் அன்று வியட்நாமுக்கு அப்பால் கடலில் இந்த படகு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.


மீட்கப்பட்ட இலங்கையர்களில், 151 பேர் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்டு 2022 டிசம்பர் 28 ஆம் திகதியன்று இலங்கை வந்தடைந்தனர்.


இந்தநிலையில் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 23 இலங்கையர்கள் இந்த வாரம் கட்டுநாயக்க வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.


ஏப்ரல் 19ஆம் திகதி நேற்று முன்தினம நாடு கடத்தப்பட்ட இந்த குழுவில் 15 ஆண்களும் 06 பெண்களும் அடங்குவர். அவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »