உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று ரஷ்யாவின் அதிநவீன போர் விமானங்களில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.
சுகோய்-34 வகை விமானம் ஒன்றே உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்று தவறுதலாக ரஷ்ய நகரை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் பெல்கோரேட் நகரின் வீதிகளில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதோடு பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன.
மேலும் வீதிகளில் நடந்து சென்ற 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து அறிந்ததும் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் விரைந்து சென்று விசாரித்தனர்.
இதில் ரஷ்ய நகர் மீது தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது தெரியவந்தது. இதனை ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
மேலும் தவறு நடந்தது எப்படி? போர் விமானத்தின் குறி தவறியது ஏன்? என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
