ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2023ம் ஆண்டு 6ம் ஆண்டுக்கான பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையத்தில் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 08.05.2023 நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்துக்குச் சென்று மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
www.moe.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பாடசாலை விண்ணப்பம் தொடர்பான பாடசாலைக் கணக்கெடுப்பு எண் (சென்சஸ் எண்) கொண்ட ஆவணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
