Our Feeds


Thursday, April 20, 2023

ShortNews

பக்தர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயற்சித்த விஹாராதிபதி கைது!



பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விஹாரை ஒன்றின் விஹாராதி ஒருவரை  பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு  பிரிவிளனர் தெரிவித்துள்ளனர். 


பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு  கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றைவிற்பனை செய்வதற்காக கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினால் அவர்  கைது செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே அவர்  விஹாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »