Our Feeds


Friday, April 21, 2023

News Editor

ஹோட்டல் ஒன்றில் நுழைந்து அத்துமீறி தாக்குதல்


 யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.


பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஹோட்டலின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »