களனி ஆற்றில் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டியந்தோட்டை அத்தனக பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
42 வயதுடைய நபரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் வேளையில், அத்தனக பிரதேசத்தில் களனி ஆற்றுக்கு அருகில் உணவு அருந்திவிட்டு கைகளை கழுவச் சென்ற போதே குறித்த நபர் ஆற்றுக்குள் தவறி விழுந்து காணமல் போயுள்ளார்.
அவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், கடற்படையினருடன் இணைந்து குறித்த நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
