Our Feeds


Saturday, April 15, 2023

SHAHNI RAMEES

சூடானில் பதற்றம் : விமான நிலையத்தை கைப்பற்றியது துணை இராணுவ படை

 

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை இராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.



இதனால் அங்கு இராணுவத்துக்கும், துணை இராணுவப் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.



சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னர் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. 



அங்கு இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. 



அதுமட்டுமல்லாது இராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை இராணுவப் படையான ஆர்எஸ்எஃப் (Rapid Support Forces) என்ற பிரிவும் இராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது.



இந்நிலையில், சூடான் நாட்டின் கர்த்தூம் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக துணை இராணுவப் படை தெரிவித்துள்ளது. 



இதனையடுத்து சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நிலவி வருகின்றது. 



நாடு முழுவதும் கலவரம் உருவாகியுள்ளது. இராணுவம் நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »