தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்துள்ளது.
இந்த தீ சிறிது நேரத்தில் காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.
இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும், தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது.
தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மீட்பு படையினர் அங்கிருந்து சுமார் 300 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து சாம்பலாகின.
