Our Feeds


Wednesday, April 12, 2023

SHAHNI RAMEES

நிறைவுக்கு வந்தது பல்கலை விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்பு...!

 

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.



தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



நேற்று பிற்பகல் ஆரம்பமான கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹெக்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »