Our Feeds


Sunday, April 16, 2023

ShortNews

பொலிஸ் கான்ஸ்டபிளை மோட்டார் பைக்கினால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றவர் கைது!



னவடுன, எரமுதுகஹா சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உனவடுன, மாதரம்ப கெகுலனோவி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று (15) மாலை உனவடுன, எரமுதுகஹ சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தபோது காலியிலிருந்து மாத்தறை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »