Our Feeds


Thursday, April 20, 2023

SHAHNI RAMEES

துருக்கி நிலநடுக்கம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக கட்டப்படும் வீடுகள்...!

 

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக 6 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மேலும் தெரிவிக்கையில்,



கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நூற்றாண்டின் பேரழிவு என தெரிவித்துள்ளார்.



பூகம்ப மண்டலத்தில் 507,000 குடியிருப்புகள் மற்றும் 143,000 கிராம வீடுகள் உட்பட 650,000 புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



நிலநடுக்கங்களின் பெரும்பாலான குப்பைகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், பேரழிவிற்குப் பிந்தைய 100,000 குடியிருப்புகள் மற்றும் கிராம வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



நிலநடுக்கங்களின் தடயங்கள் அகற்றப்பட்டதால், இப்பகுதியில் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »