ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்த போதிலும், உழைக்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.