Our Feeds


Sunday, April 16, 2023

ShortNews

VIDEO: நான் அரசாங்கத்தை ஆதரிக்கவேயில்லை. மீடியாக்கள் என் பேச்சை திரித்து விட்டன - ராஜிதவின் அந்தர் பல்டி..!



ற்போதைய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாக ஊடகங்களில் வெளியான அனைத்து செய்திகளையும் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால், அதனை ஏற்கத் தயார் என அண்மையில் சேனாரத்ன தெரிவித்ததாக கூறப்படும் அறிக்கை தொடர்பில் ஆராய ஐக்கிய மக்கள் சக்தி குழுவொன்றை நியமித்துள்ளது.

இக்குழு அண்மையில் கூடியபோது நாடாளுமன்ற உறுப்பினர் சேனாரத்னவை விசாரணைக்கு அழைத்துள்ளது.

அங்கு, தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ ஆதரிப்பதாக எந்தக் கருத்தையும் தான் வெளியிடவில்லை எனவும், ஊடகங்களால் தனது அறிக்கை திரிபுபடுத்தப்பட்டதாகவும் சேனாரத்ன தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி தொடர்பில் ராஜித சேனாரத்ன பேசிய வீடியோ!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »