புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 17 மாணவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், முன்னதாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் மாணவர்களது ஒழுக்கம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அவரது இல்லத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற சில மாணவர்கள், குறித்த ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பின்னர், காயமடைந்த ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.