Our Feeds


Monday, May 22, 2023

ShortTalk

சவுதி அரேபியா & அரபு தேசத்தின் முதலாவது விண்வெளி வீராங்கனை ரய்யானா பர்னாவி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமானார்!



பெண்ணொருவர் உட்பட சவூதி அரேபியர்கள் இருவர், முதல் தடவையாக தனியார் விண்வெளிப் பயணத்திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர்.


மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவி (Rayyanah Barnawi) என்பவரே விண்வெளிக்குச் சென்றுள்ள முதல் சவூதி அரேபியப் பெண்ணாவார். விண்வெளிக்குச் சென்றுள்ள முதல் அரேபிய பெண்ணும் இவரே.

Axiom Mission 2 (Ax-2) விண்வெளிப் பயணத்தின் மூலம் இவர் விண்வெளிக்குச் சென்றுள்ளார். 

இப்பயணத்தில் சவூதி அரேபிய விமானப்படை விமானியான அலி அல் கார்னியும் (Ali Al-Qarni) இடம்பெற்றுள்ளார்.   சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் இவர்கள் இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

நாசாவின் முன்னாள் பெண் விண்வெளியாளரான அமெரிக்காவின் பெக்கி வைட்சன் விண்கலத்தின் கொமாண்டராகவும் மற்றொரு அமெரிக்கரான ஜோன் ஷொப்னர் விண்கலத்தின் விமானியாகவும் இப்பயணக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி ஞாயிறு மாலை (இலங்கை இந்திய நேரப்படி இன்று அதிகாலை) இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர். 

ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் தயாரித்த ட்ரகன் 2 விண்வெளி ஓடம் மூலம் இவர்கள் பயணிக்கின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரக ரொக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். 

இன்று திங்கட்கிழமை இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவர் என எதிபார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »