Our Feeds


Monday, May 22, 2023

News Editor

விவசாயிகளுக்கு இன்று முதல் வவுச்சர்கள்


 சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானிய வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை நாளை (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன அல்லது சேதன உரங்களை கொள்வனவு செய்வதற்கு மானிய வவுச்சர்கள் வடிவில் நிதி ஒதுக்கீடுகளை வழங்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், இரண்டு ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.


விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வருடம் சிறு போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 650,000 விவசாயிகளுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படுவதாகவும், இந்த வவுச்சர்கள் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க, இரண்டு அரச உர நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் இரசாயன அல்லது சேதன உரங்களை அனைத்து உழவர் சேவை மையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் கொள்முதல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »