Our Feeds


Friday, May 19, 2023

ShortTalk

பாராளுமன்ற விவாதத்தை நேரில் காண வாய்புத் தாருங்கள் - ஜனக்க ரத்நாயக்க கோரிக்கை!



பாராளுமன்ற விவாதத்தை நேரில் காண தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

குறித்த  கடிதம் நேற்று முன்தினம் (17) அவரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பை காண்பதற்கே தனக்கும் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »