Our Feeds


Monday, May 22, 2023

ShortTalk

நிவாரணத் திட்டங்களில் ஒரே வீடுகளில் வாழும் பல குடும்பங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் - உதயகுமார் MP யின் கோரிக்கைக்கு நிதி இராஜாங்க அமைச்சு சாதகமான பதில்!



அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 


இதனை அடுத்து இவ்விடயம் குறித்து கவனம் செலுத்திய நிதி ராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.


அழைப்பின் பிரகாரம் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள நிதி ராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியது.


பெருந்தோட்ட பகுதிகளில் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்வதாகவும் சில குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்வதாகவும் அரசாங்கத்தின் நிவாரண திட்டங்களில் தொடர்ச்சியாக இவர்கள் புறக்கணிக்கப்படுவதால் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் நிவாரணத் திட்டங்களில் ஒரே வீடுகளில் வாழும் பல குடும்பங்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் எடுத்து கூறினார்.


இதனை ஏற்றுக் கொண்ட நிதி ராஜாங்க அமைச்சர் தனது செயலாளருக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »