Our Feeds


Friday, May 19, 2023

ShortTalk

VIDEO: வசந்த முதலிகேவை வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்த சஜித்



களனிப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதிப் பேரணியின்போது கைது செய்யப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ராகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.


இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொருளாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட குழுவினரும் சென்றிருந்தனர்.


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், கருத்து சுதந்திரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது, எனவே மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்போது அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.


இந்நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை வன்மையாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


தேர்தலை தடுத்து, சர்வாதிகார ஆட்சியை நடத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கத்துடன் தமக்கோ அல்லது தமது கட்சியில் உள்ள எவருக்கோ தொடர்பில்லை என்றும், மக்கள் விரோத அரசாங்கத்துடன் ஒருபோதும் இணையப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »