அம்பாறை – இங்கினியாகலையில் அண்மையில் காணாமல் போன இரண்டு சிறுமிகள், களனி – மீகஹாவத்தை பகுதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதான குறித்த இரண்டு சிறுமிகளும் கடந்த 15ம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று மீகஹாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
