Our Feeds


Tuesday, June 13, 2023

ShortNews

பாடசாலை உபகரணங்களின் விலை 20 முதல் 25 வீதம் குறைக்க தீர்மானம்.



ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று (13) முதல் பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.


இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வங்கி வட்டி குறைந்துள்ளமை காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம் என சங்கத்தின் தலைவர் திரு.நிருக்ஷ குமார தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »