Our Feeds


Sunday, June 18, 2023

SHAHNI RAMEES

மட்டக்களப்பில் கோழிச் சண்டை சூதாட்டம் - 7 பேர் கைது

 


மட்டக்களப்பு - வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை நேற்று (17) பொலிஸார் கைது செய்துள்ளனர்.



குறித்த சந்தர்ப்பத்தில் 6 சண்டை கோழிகள் மற்றும் ஒரு தொகை பணம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தை சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என தெரிவிக்கப்படுகின்றது.



இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »