Our Feeds


Sunday, June 18, 2023

SHAHNI RAMEES

அப்துல் ஹலீம் MPயின் தம்பி கைது..!

 

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த நபர் டுபாயில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து இரண்டரை இலட்சம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மூவரிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளார். 



இவ்வாறு நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கலகெதர மற்றும் அக்குறணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த நபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் டுபாய் தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போது அந்த மூன்று விசாக்களும் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது. 



எனவே, இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »