தங்காலை தங்கெட்டிய வீரமாவத்தையில் உள்ள வீடொன்றிற்கு தண்ணீரைத் துண்டித்த தங்காலை நீர் வழங்கல் சபையின் ஊழியர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து ஒருவரால் தாக்கப்பட்டதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்காலை நீர் வழங்கல் சபையின் குழாய் பணியாளராக பணிபுரியும் எச்.பி.சிறிசாந்த என்ற ஊழியரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி தங்காலை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்காலை பிரதேசத்தில் நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் நீர் இணைப்பை துண்டிக்க தங்காலை நீர் வழங்கல் சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட ஊழியர்கள் சென்ற போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
