Our Feeds


Wednesday, June 21, 2023

ShortNews

அதிர்ச்சி சம்பவம்: மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பொலிஸில் சரணடைந்த மாணவன் : கெக்கிராவையில் சம்பவம்!



கெக்கிராவை ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பதினைந்து வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் பதினாறு வயது  மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ரணஜயபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சந்தேக நபர் வசிக்கும் வீட்டுக்கு  அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியே  அவரது  வீட்டுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் மாணவியை தாக்கியதாக கூறப்படும் மாணவன் மாணவியை தாக்க பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியுடன்  ரணஜயபுர பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து  பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »