Our Feeds


Friday, June 30, 2023

SHAHNI RAMEES

சீனாவில் குரங்குகளுக்கு மனித அன்பு கிடைக்கும்...!

 

சீன மிருகக்காட்சிசாலைக்கு குரங்குகளை வழங்கினால் அவை மனிதர்களின் அன்பு, ஆதரவுடன் வாழும். வனவிலங்குகளால் பயிர்கள் அழிவடைவதை தடுப்பது குறித்து எம்மிடம் கேட்கவேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



மேலும், வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கொழும்பில் டொலர்களை நம்பி ஏசி அறைகளில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு புரியப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.



சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைக்கு வழங்குவது தொடர்பிலான வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுசூழல் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளால் அத்திட்டம் கைவிடப்பட்டது. எனினும், மீண்டும் சீனாவின் தனியார் நிறுவனமொன்று குரங்குகளை பெற்றுகொள்வதற்கு முன்வந்துள்ளது.



வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுப்பது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து விவசாய அமைச்சுக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.



அதில் சேலைகளை தொங்க விடுதல், விவசாய நிலத்தை சுற்றி தகரங்களை கட்டுதல், பயிர்நிலத்தின் அரை ஏக்கரை வனவிலங்குகளின் உணவுக்காக வழங்குதல் போன்ற பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர்.



சீன மிருகக்காட்சிசாலைக்கு குரங்குகளை வழங்கினால் அவை மனிதர்களின் அன்பு, ஆதரவுடன் வாழும்.



பயிர்நிலங்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் துப்பாகிகளை கேட்கிறார்கள். இவ்வாறு சென்றால் இறுதியில் என்ன நடக்கும் என இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீர கேள்வியெழுப்பினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »