Our Feeds


Wednesday, June 21, 2023

ShortNews

இன்றும் பல நகரங்களில் மழைக்கு வாய்ப்பு - முழு பட்டியல் இணைப்பு



மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 45 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்


அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை


மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்


காலி - அடிக்கடி மழை பெய்யும்


யாழ்ப்பாணம் - அடிக்கடி மழை பெய்யும்


கண்டி - சிறிதளவில் மழை பெய்யும்


நுவரெலியா - சிறிதளவில் மழை பெய்யும்


இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்


திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


மன்னார் - அடிக்கடி மழை பெய்யும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »