Our Feeds


Saturday, June 10, 2023

ShortNews

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பால் சர்வதேச அரசியலில் பரபரப்பு



பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பால் சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டைய நாடான பெலாரஸ் ஜனாதிபதியுடன், ரஷ்ய ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார். 


பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத ஆரம்பத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.


இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »