ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள் நம்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்துடன் பகல் முழுவதும் இருந்து விட்டு இரவில் ஜனாதிபதியுடன் சேர்ந்து பொழுது போக்கும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்றனர். இந்த ஐக்கிய மக்கள் சக்தியினர் பாம்பு போன்றவர்கள். எவ்வாறாயினும் கட்சியுடன் உறுதியாயிருக்கும் எம்மை நம்புவதற்கு பதிலாக கட்சித் தலைவர் அவர்களைத் தான் நம்புகின்றார்.
"தயவுசெய்து திரு. பிரேமதாசவிடம் பேசி அவரை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்” என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஹிருணிக்கா தெரிவித்தார்.
