Our Feeds


Thursday, July 13, 2023

SHAHNI RAMEES

பாகிஸ்தானில் பரிதாபம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி



 பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின்

தலைநகராக லாகூரில் நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடத்தை கரும்புகை பரவியுள்ளது. 


இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 


தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டிடத்தில் பரவி இருந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 




தீயினால் கட்டிடம் முழுவதும் சேதமானது. மேலும் கட்டிடத்தின் ஒருபகுதி உருதெரியாமல் சிதைந்து விழுந்தது.




இது குறித்து தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 




பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தின் பேரில் தாக்குதல் இடம்பெற்றதா? என்ற நோக்கத்தில் விசாரணையை ஆரம்பித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.




நள்ளிரவில் வீட்டில் திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பிரிட்ஜின் கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது. 




புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளனர். 




மேலும் முழுவதுமாக வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »