Our Feeds


Wednesday, July 5, 2023

ShortNews

கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே



இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.


இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய பதினொரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


இது முதலீட்டு அதிகார சபைத் திட்டமாக கொண்டு செல்லப்படும் என்றும், தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 4-5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வருவாயைப் பெற்றுத் தரும் எனவும் அமைச்சர் டயானா மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »