Our Feeds


Saturday, July 1, 2023

SHAHNI RAMEES

மகாராஷ்டிராவில் பயங்கர தீ விபத்து - 25 பயணிகள் பலி

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஒன்று தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 



குறித்த சம்பவம் சம்ருத்தி மகாமர்க் அதிவேக நெடுஞ்சாலையில் பல்தானா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.



இருந்தாலும் பேருந்தில் இருந்தவர்கள் தப்பியோட முடியவில்லை. 25 பயணிகள் உயிரோடு எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 



எரிந்த பேருந்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 32 பேர் பயணம் செய்ததில் 8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். 



காயம் அடைந்தவர்கள் புல்தானாவில் உள்ள மருத்துவமனiயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »