Our Feeds


Sunday, July 9, 2023

ShortNews

உலகில் அதிக பொது விடுமுறைகள் வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.



உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


World of Statistics தரவுகள் இதனை வெளியிட்டுள்ளது.


இந்த தரவுகளின்படி இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளதுடன், அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடாக நேபாளம் இருக்கின்றது.


அங்கு ஆண்டு தோறும் 35 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.


நேபாளம் மற்றும் இலங்கைக்கு கூடுதலாக, பங்களாதேஷ் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது, பங்களாதேஷில் ஆண்டுதோறும் 22 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகின்றது.


அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் 10-13 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெக்சிகோ எட்டு பொது விடுமுறை நாட்களுடன் குறைந்த வருடாந்திர பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »