அத்தனகலு ஓயாவில் நீராட சென்ற 20 வயது யுவதி செல்பி எடுக்க முயன்ற போது நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை , குணசிங்கபுர தொடர்மாடி குடியிருப்பு வசித்து வந்த பாத்திமா பஸ்னா என்பவரே இவ்வாறு ஊயிரிழந்துள்ளதாகவும் புறக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக பணிப்புரிந்தவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதியுடன் மெலும் 7பேர் நீராட சென்றிருந்ததாகவும்அதன்போதே பாறையிலிருந்து விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து தனக்கு நீச்சல் தெரியாது என அவர் கூச்சலிட்டுள்ளதுடன் அதனை தொடந்து யுவதி நீரில் அடித்துச் சென்றுள்ளமை பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இன்று (3) பிற்பகல் வரை பொலிஸார் அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை கண்டுபிடிக்க முயற்சித்திருந்தாலும் யுவதி மீட்கப்படவில்லை என்பதுடன் யுவதியை தேடும் பணிகள் கடற்படையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
