கிரிக்கெட் நடுவருக்கான 5 ஆம் நிலை பரிட்சையில் இவர் சித்தியடைந்துள்ளார்.
2016 இல் நடுவர் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரிஸ்வி -
2018 இல் - கடின பந்து நடுவராக செயற்பட்டு தனது பணியை முன்னோக்கி எடுத்துச் சென்று மருதமுனையில் மட்டுமன்றி அம்பாறை மாவட்டம் முழுவதும் தலைசிறந்த நடுவர் என்ற பாராட்டையும் பெற்றார்.
கல்முனை தொகுதியில் - மேற்படி பரிட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற இரண்டாம் நபர் என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்து - ஊக்குவித்த - இலங்கை கிரிக்கெட் சங்க
3 ஆம் தர நடுவர் - கல்முனை AWM . ஜெஸ்மிக்கு , மருதமுனை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீனின் பேரன் முறையான ரிஸ்வி - சமுக ரீதியான செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
மருதமுனைக்கு - பல துறைகளில் பெருமை சேர்த்தவர்களில் - விளையாட்டு துறையில் பெருமை சேர்த்தவர்களில் ரிஸ்வியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது - இந்த பரிட்சை முடிவு குறித்து பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தகவல் - ஏ.எச் .எம் . பூமுதீன்
