Our Feeds


Wednesday, July 5, 2023

SHAHNI RAMEES

முறைப்பாட்டு குறிப்பேடுகளை எரித்த பொலிஸ் சார்ஜன்ட்.!

 

அகரபத்தனை பொலிஸாரின் முறைப்பாட்டு குறிப்பேடுகளின் பக்கங்களை எரித்து அழித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அகரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த புத்தகத்தை அழிக்குமாறு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு குறித்த  பொலிஸ் சார்ஜன்ட் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம், குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த குறிப்பேட்டை பெண்கள் விடுதிக்கு எடுத்துச் சென்று  அதன் பக்கங்கள் அகற்றப்பட்டு, பலவற்றை எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

எந்தவொரு உயர் அதிகாரியிடமும் அனுமதி பெறாமல் பல்வேறு முறைப்பாடு குறிப்பேடுகளை அழித்த குற்றத்திற்காக இந்த சார்ஜன்ட் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »