Our Feeds


Thursday, July 13, 2023

SHAHNI RAMEES

பேராதனை வைத்தியசாலையில் யுவதி மரணம் - கண்டி நீதவான் அதிரடி உத்தரவு



பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய

யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட கண்டி நீதவான் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.



வெளிப்படையான தீர்ப்பில், யுவதியின் உடலின் மாதிரிகளை அறிக்கைக்காக அரச ஆய்வாளருக்கு அனுப்ப நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.




வயிற்று நோயினால் சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன (21) என்பவர் தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




அத்தோடு குறித்த யுவதியின் மரணத்திற்குக் காரணமாக குறிப்பிடப்படும் செஃப்ட்ரியாக்ஸோன் என்ற ஆன்டிபயோடிக் தற்காலிகமாக பாவனையிலிருந்து விலக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




இவ்வாறு அகற்றப்பட்ட மருந்துகளின் இருப்பு இன்று 13 ஆம் திகதி ஆய்வக ஆராய்ச்சிக்காக அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்திற்கு கொண்டு வரப்படும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர தெரிவித்துள்ளார். 




ஆய்வகப் பரிசோதனைகளின் பின்னரே இந்தத் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து சரியான அறிக்கையை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .




இதேவேளை, குறித்த தடுப்பூசிகள் வைத்தியசாலையின் மருந்தகத்தில் உரிய முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா, அவற்றைப் பயன்படுத்தும் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதில் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »