Our Feeds


Sunday, July 9, 2023

SHAHNI RAMEES

இறுதி தீர்மானம் எடுக்கும் பொறுப்பை டிரானுக்கு வழங்கிய ஜனாதிபதி

 

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் அறிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை கீழ் வருமாறு ,



பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதா அல்லது முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவதா என்பதை தீர்மானிக்குமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (09) பொறுப்பதிகாரியுடன் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



குறித்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையின் 35வது பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த ஜூன் 25 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »