நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு இடம்பெற்றது.
இதில் 2-வது நாளில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த படத்தில் பச்சை நிற இராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் முகத்தில் கடுமையாக எதையோ யோசிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.