கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி கடந்த 2018 ஆம் ஆண்டில் லீ செஸ்டர் சிட்டி அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.
ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டொலர்களை செலுத்த அல் நஸர் தவறிவிட்டது.
2021 ஆம் ஆண்டில் பணத்தை செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என பிபா எச்சரித்தது.
இந்நிலையில், எந்த புதிய வீரர்களையும் தங்கள் அணியில் சேர்க்க அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை நீக்கும் பொருட்டு அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது