Our Feeds


Sunday, July 2, 2023

ShortNews

லிட்ரோ சமையல் கேஸ் விலை மீண்டும் குறைக்கப்படுகிறது. - எப்போது? எப்படி?



லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது.

கடந்த மாத திருத்தத்தை போன்றே எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படி, தற்போது இதன் விலை 3,186 ரூபாவாக காணப்படுகிறது. 

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு  சிலிண்டரின் விலை 598 ரூபாவாகவும் உள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »