Our Feeds


Wednesday, July 5, 2023

SHAHNI RAMEES

கார் விபத்தில் கணவன் மனைவி படுகாயம்

 

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர்.



குறித்த விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.





திருகோணமலையிலிருந்து-அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகத்தினால் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் வேகமாக வந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.



குறித்த விபத்தின் போது ஹொரவ்பொத்தான-கல்பே பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.



விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »